×

நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார் பயிர்களை நன்றாக வளரச் செய்யும், பூச்சிகளை விரட்டும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல்முறை விளக்கம்

சமயபுரம், மே 5: மண்ணச்சநல்லூர் அருகே வேளாண் கல்லூரியின், கிராமத்தங்கல் திட்டத்தில், 276 மாணவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மண்ணச்சநல்லூர் எம் ஆர் பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் வேளாண் பல்கலையில் இறுதியாண்டு மாணவர்கள் தத்தமங்கலம் கிராமத்தில் கிராமத்தங்கல் களப்பயணம் மேற்கொண்டனர். அப்போது கிராம விவசாயிகளுக்கு தேமோர் கரைசல் குறித்து விளக்கம் அளித்து செய்முறை காண்பித்து விழிப்புணர்வு செய்தனர்.

இதுகுறித்து மாணவிகள், விவசாயிகளிடம் தெரிவித்ததாவது: தேமோர் கரைசல் தயாரிப்பது என்பது தேங்காய்ப்பால், புளிச்ச மோர் கலந்த இயற்கை கலவைதான் தேமோர் கரைசல் என்றழைக்கப்படுகிறது. நன்கு புளித்த மோர் 1 லிட்டரும், தேங்காய் எண்ணிக்கை 1 இக் கரைசலுக்கு தேவைப்படும் பொருள்கள் ஆகும். தேங்காயை துருவி அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலக்கி 1 லிட்டர் தேங்காய்ப் பாலை எடுத்து 1 லிட்டர் மோருடன் நன்றாக கலக்கவும். இந்த கரைசலை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவாரம் வரை ஊறவிடவும். அதன்பின் இந்த கரைசல் 7 நாட்கள் வைத்திருந்து ஒருவாரம் கழித்து கரைசல் நன்றாக புளித்திருக்கும். ஒரு லிட்டர் தேமோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

இதில் உள்ள ‘சைட்டோசைம்’ என்ற அழைக்கப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி உள்ள ஆற்றலை தேமோர் கரைசலும் பெற்று உள்ளதால் நன்றாக வளராத பயிர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஒரு ஏக்கருக்கு தெளிப்பான் மூலமாக தெளிக்கும்போது பயிர்கள் நன்றாக வளரச் செய்யும் தன்மையும், பூச்சிகளை விரட்டும் தன்மையும் காணப்படுவதால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும். இதையடுத்து இயற்கை முறையில் தேமோர் கரைசல் உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் வாயிலாக சுற்றுச்சூழல் மாறுபாடுகளை தவிர்க்கலாம் என வேளாண் மாணவிகள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எம். ஆர். பாளையத்தில் உள்ள நாளந்தா வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ஆர்த்தி, கோபிகா, ஹேமரூபினி, கிருபாநாயகி, கீர்த்திக தர்ஷினி,கௌசல்யா, நவ்யா, தர், நிவேதா,பிரியதர்ஷினி, பிரியவர்தினி , ரசிகா மற்றும் விவசாயிகள் , கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

The post நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார் பயிர்களை நன்றாக வளரச் செய்யும், பூச்சிகளை விரட்டும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellala Kandarulinar ,Samayapuram ,Gram Thangal ,College of Agriculture ,Mannachanallur ,Mannachanallur MR Palayam ,Dattamangalam ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் வைக்கோல் போர் எரிந்து சேதம்